ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் மதுரையில் முழு ராணுவ மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்பட்டது..
ஜம்மு காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லக்ஷ்மணன் வீரமரணம் அடைந்தார்.. லக்ஷ்மணனின் உடல் இன்று தனி விமானம் மூலம் அவரின் சொந்த ஊரான மதுரைக்கு அவரின் உடல் இன்று கொண்டு வரப்பட்டது.. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்..
பின்னர் ராணுவ வாகனத்தின் மூலம் லக்ஷ்மணனின் உடல், டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.. அங்கு அவரின் உடலுக்கு, பெற்றோர், உறவினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கன மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.. இதைத் தொடர்ந்து லக்ஷ்மணனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அரசு உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் லக்ஷ்மணனின் உடல் அவரின் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிறு வயதில் லக்ஷ்மணன் விளையாடிய கிரிக்கெட் மட்டை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.. டி.புதுப்பட்டி கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்து ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்..