fbpx

சூதாட்ட செயலி உள்பட 22 செயலிகள் முடக்கம்..!! மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு இதுதான் காரணமா..?

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (காங்கிரஸ்) கோடிக்கணக்கில் பணம் பெற்றார் என அமலாக்கத்துறை பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜகவைப் பொறுத்தவரை கணிசமான இடங்களைப் பெற்றாலும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறுகின்றன.

இந்நிலையில், வட இந்தியாவில் பிரபலமான மகாதேவ் சூதாட்ட செயலி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை அதிரடியாக மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான கார் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் ரூ.5.86 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. சத்தீஸ்கர் மாநில தேர்தல் செலவுகளுக்காக முதல்வர் பூகேஷ் பாகலிடம் கொடுக்க வைத்திருந்த பணம் இது எனவும் சிக்கிய ஆசிம் தாஸ் என்பவர் வாக்குமூலம் கொடுத்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

மேலும், சத்தீஸ்கர் போலீஸ் கான்ஸ்டபிள் பீம் யாதவ் என்பவரையும் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போது பீம் யாதவ், கடந்த 3 ஆண்டுகளில் அரசின் அனுமதி இல்லாமல் துபாய்க்கு பல முறை சென்றதும் அங்கு மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்கள் ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டச் செயலிகள் மற்றும் இணையதளங்களைத் தடை செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு மகாதேவ் புக்கிங் செயலி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பருவமழை தொடங்கியாச்சு!… சேற்றுப்புண்ணை தவிர்க்க சில டிப்ஸ்!… வீட்டு வைத்தியம்!

Mon Nov 6 , 2023
மழைக்காலங்கள் வந்து விட்டாலே சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரிலே அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும். தேங்கியுள்ள மழை நீரில் கால் வைப்பது, மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும். இது ஒரு பூஞ்சை தொற்று கிருமிகளால் ஏற்படும் அரிப்பே சேற்றுப்புண் ஆகும்.இந்தபூஞ்சை ஈர பதத்தில் […]

You May Like