அமெரிக்காவில் மைனே மாநிலத்தின் லூயிஸ்டன் நகரில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன. இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அக்டோபர் 25ஆம் தேதி இரவு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்ளூர் பார் மற்றும் வால்மார்ட் மையத்தில் நடந்தது. விசாரணை அதிகாரிகள் சம்பவ இடங்களை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை லூயிஸ்டன் காவல்துறைனர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சந்தேகத்திற்குரிய அந்த நபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் அரை தானியங்கி துப்பாக்கியை கையில் பிடித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் ராபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சுமார் 20 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர். லூயிஸ்டன் மாநில காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டதோடு தயவு செய்து கதவுகளை மூடிக்கொண்டு உங்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளது.