fbpx

2,250 காலிப்பணியிடங்கள்..!! இன்றே கடைசி நாள்..!! செவிலியர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (அக்.31) கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’எங்க ஓடினாலும் விடமாட்டோம்’..!! திமுக பிரமுகரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்..!! திருவண்ணாமலையில் பரபரப்பு..!!

Tue Oct 31 , 2023
திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்து (42). இவர், கட்டட ஒப்பந்ததாரர். இவர் நேற்றிரவு 7 மணியளவில் ராஜேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களை ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். முத்து போளூர் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் அருகே […]

You May Like