fbpx

Fisherman: 24 தமிழக மீனவர்கள் விடுதலை…! ஒருவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை…!

இலங்கை நீதிமன்றம் நேற்று 24 தமிழக மீனவர்களை விடுவித்துள்ளது, ஆனால் ஒருவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்தது. இந்த 25 மீனவர்களும் மார்ச் 20 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அந்தோணி ஆரோன், ராஜ், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமானது.

மீனவர்களை ஏப்.4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 24 மீனவர்களும் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். படகு உரிமையாளர்கள் ஆரோன் மற்றும் ராஜ் ஆகியோர் படகு ஓட்டுனர்களாக செயல்பட்டதால், அவர்களது இரண்டு படகுகளையும் தேசியமயமாக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக மற்றொரு படகு ஓட்டுநரான ஜெகனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜெகனின் படகு உரிமையாளர் அருளானந்தம் அனைத்து படகு ஆவணங்களுடன் ஜூன் 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஜெகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 24 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Vignesh

Next Post

தமிழகத்தில் அதிர்ச்சி!… ஹாலிடே எதிரொலி!… ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்!

Fri Apr 5 , 2024
Flight Ticket: தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட உள்ளன. கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு […]

You May Like