fbpx

கடற்கரையில் யோகா செய்த நடிகை.. ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!! – அதிர்ச்சி வீடியோ

தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். ரஷிய நடிகை ராட்சத அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

24 வயது நிறைந்த ரஷ்ய நடிகையான கமிலா பெல்யாட்ஸ்காயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் தீவின் கடற்கரையில் உள்ள பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்துள்ளார்.. இதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத ராட்சத அலை எழும்பி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அப்போது அருகில் இருந்த நபர் நடிகையை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் சில கி.மீ. தொலைவில் ரஷிய நடிகை சடலமாக மீட்கப்பட்டார்.

அந்த தீவில் கனமழை பெய்து வருவதால், கடற்கரைக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என உள்ளூர் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்திருந்தனர். அதேநேரத்தில் நடிகை யோகா செய்த இடத்தில் எச்சரிக்கை கொடிகள் மற்றும் பலகைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடம் இயற்கைக் காட்சிகளை ரசிக்கக்கூடியதாக இருந்துள்ளது.

Read more ; Air Fryer : ஏர் ஃபிரையரில் சமைப்பது புற்று நோயை ஏற்படுத்துமாம்..! – நிபுணர்கள் எச்சரிக்கை

English Summary

24-year-old Russian actress Kamilla Belyatskaya’s final moment before being swept to death caught on cam

Next Post

BIG BREAKING | சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000..!! முதலமைச்சர் அறிவிப்பு..!!

Tue Dec 3 , 2024
Chief Minister M.K. Stalin has announced that Rs. 5 lakh each will be given to the families of those who died in Cyclone Fenchal and floods.

You May Like