இஸ்ரேல் நாட்டை அடுத்துள்ள காசா பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு பகுதி அருகே கடந்த சனிக்கிழமை இரவு இசை திருவிழா நடந்தது. அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டாட்டத்துடன் இருந்தனர். ஆனால், திடீரென்று அவர்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராத விதமாக தாக்குதல் தொடுத்தனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில், சுமார் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த தாக்குதலில் ஒரே ஒரு இளம் பெண் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். அந்த பகுதியில் தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த தாக்குதலில், உயிர் தப்பிய லீ சசி என்ற அந்த இளம் பெண் மற்றும் அவரை தவிர்த்து மேலும் 35 பேர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, ஒரு பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச்சென்று, அங்கே ஒளிந்து கொண்டனர். ஆனாலும் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்த ஹமாஸ் அமைப்பினர், துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். மேலும், அந்த அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டுகளையும் வீசி உள்ளனர். இதன் காரணமாக, பலர் உயிரிழந்துள்ளனர். இதில் சசி பாதுகாப்பாக தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து, சசி தன்னுடைய தோழியான நடாஷா என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். மேலும் அதற்கு சான்றாக விடீயோவையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பலர் உயிரிழந்த நிலையில் இருக்கும் காட்சிகள் பதிவாகி அதிர்ச்சி அளிக்கிறது.