சென்ற சனிக்கிழமை திடீரென்று, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது முன்னறிவிப்பு இன்றி தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு காசா நகர் மீது மிக கடுமையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதன் காரணமாக, காசா நகரில் இஸ்ரேல் விமானங்களின் குண்டு மழையின் காரணமாக, ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துதாக தெரிகிறது.
அதோடு, இஸ்ரேலை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று 150 பேரை பனைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பு காசா நகரில் பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தி இருக்கிறது. அவர்கள் எல்லோரையும் மீட்கும் வரையில் இந்த போர் ஒரு முடிவுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹாமஸ் அமைப்பினரிடமிருந்து, இஸ்ரேல் நாட்டின் பனைய கைதிகளை மீட்டு வருவதற்கும், மத்தியஸ்தம் செய்வதற்கும் தயாராக இருப்பதாக உலக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
அதேபோன்று, ஹமாஸ் அமைப்பினர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்து வந்த சூழ்நிலையில், நேற்று இரவு ஹமாஸ் அமைப்பினர் காசாநகர் எல்லையில் இருந்து இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் அந்த காட்சி சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி இருக்கும் பனைய கைதிகளை அவர்களிடமிருந்து மீட்டு விட்டால், ஓரளவிற்கு இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று உலக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை கருதுகின்ற சூழ்நிலையில், அவர்களை மீட்பதற்கான பணியும் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில்தான் காசா நகரத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்படுவதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதேபோன்று, பாலஸ்தீன அரசின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நான்கு புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்களால், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. அதோடு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250க்கும் அதிகமான குழந்தைகள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.