இந்திய ரயில்வே துறையில் இருக்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் குரூப் -டி பதவிகளில் இருக்கும் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பபட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 2,694 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணியிடங்கள் : டிராக் மெஷின் உதவியாளர், பிரிட்ஜ் உதவியாளர், டிராக் மெயிண்டனர், லோகோ செட் உதவியாளர்,எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர் என பல்வேறு பிரிவில் மொத்தம் 32,438 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அல்லது NCVT மூலம் வழங்கப்படும் தேசிய தொழிற்பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : இப்பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18,000 வரை வழங்கப்பட இருக்கின்றது.
வயது வரம்பு : இப்பதவிகளுக்கான வயது வரம்பு, 01.01.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 36 வயது உடையவராக இருக்க வேண்டும். ரயில்வேயின் விதிமுறைகள்படி வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதாவது, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : இப்பணி இடங்களுக்கான தேர்வு முறை என்னவென்றால், கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை தேர்வுகள் நடத்தப்படும். அதில் கணினி வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 மட்டுமே செலுத்தினால் போதுமானது.
கடைசி தேதி : 22.02.2025 தேதிக்குள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more : விஜய்யை விடுங்க..!! தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் X, Y, Y+, Z, Z+ பாதுகாப்பு இருக்கு தெரியுமா..?