fbpx

27,000 காலிப்பணியிடங்கள்..!! யாருமே விண்ணப்பிக்கவில்லை..!! தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் 27,000 பதவிகளுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மே மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மே மாத இறுதிக்குள் அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழு அமைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட மனுவில், “தமிழகத்தில் 6,420 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 3,471 கோவில்களில் பரம்பரை அறங்காவலர்களும், 2,949 கோவில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 27,362 கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றும் மீண்டும் இது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது’’ என அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Chella

Next Post

”குடிக்கும்போது நல்லா தான் இருக்கும்... ஆனா உயிருக்கே ஆப்பு வைக்கும்”..!! என்ன தெரியுமா..? மக்களே உஷாரா இருங்க..!!

Tue Aug 29 , 2023
கோடை காலத்தில் மக்கள் தங்களது உடலை குளிர்விப்பதற்காக எலுமிச்சை சோடா உள்ளிட்ட குளிர்பானங்களை குடிக்க அதிகம் விரும்புகின்றனர். எப்படியிருந்தாலும், கோடையில் குளிர்ச்சியாக சோடா மற்றும் எலுமிச்சை சோடா போன்ற பானங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. சோடாக்கள் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை தருகிறது என்றாலும், அதில் பல தீமைகளையும் இருக்கின்றன. இது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தற்போது பார்க்கலாம். எலும்பு : எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் […]

You May Like