fbpx

இந்த மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில், பெரும்பான்மையாக வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குன்னூர் அருகே உள்ள ஜெகதலாவை தலைமையிடமாக கொண்டு காரக்கொரை, போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை, மஞ்சுதலா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஜனவரி 6ஆம் தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி...! புகை குண்டு வீசியவர் குறித்து புதிய தகவல்...! விசாரணையில் வெளியான தகவல்...!

Thu Dec 14 , 2023
நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக […]

You May Like