பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய ஈரானில் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 14 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பஸ் பயணிகள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் சுமார் 17,000 இறப்புகளுடன் உலகின் மிக மோசமான போக்குவரத்து பாதுகாப்பு பதிவுகளில் ஈரான் ஒன்றாகும். அதன் பரந்த கிராமப்புறங்களில் போக்குவரத்துச் சட்டங்கள், பாதுகாப்பற்ற வாகனங்கள் மற்றும் போதிய அவசரச் சேவைகள் ஆகியவற்றைப் புறக்கணிப்பதே இந்த மோசமான எண்ணிக்கைக்குக் காரணம்.
அர்பாயீனை நினைவு கூருவதற்காக யாத்ரீகர்கள் ஈராக் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய வருடாந்திர பொதுக் கூட்டமாக கருதப்படுகிறது. இங்கு செல்ல பாகிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Read more ; ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சென்ற வாகனம் விபத்து..!! ஒருவர் பலி