fbpx

“ஹாப்பி நியூஸ்” வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு… 2024 வரை FAME-II திட்டத்தின் மின்சார வாகனம் வாங்கினால் ரூ.15,000 ஊக்கத்தொகை…!

நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II திட்டத்தின் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுள்ளது

கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு FAME இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 மின் திறனேற்றல் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. FAME இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 01.07.2022 நிலவரப்படி 479 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் FAME இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது. தற்போது, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. FAME-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களுக்குத் தேவையான மின்னூட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் 11, 2021 முதல் FAME இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ரூ. 15,000/KWh முதல் ரூ. 10,000/KWh, வாகனத்தின் விலையில் 20% முதல் 40% வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ICE இரு சக்கர வாகனங்களுக்கு இணையான மின்சார இரு சக்கர வாகனங்களின் விலையை செயல்படுத்துகிறது. மேலும், 25 ஜூன், 2021 அன்று ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2024 மார்ச் 31 வரை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.

Also Read: 12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு… ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket…! எப்படி டவுன்லோட் செய்வது…?

Vignesh

Next Post

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு... வரும் 29-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்...! அரசுப் பணியாளர் தேர்வாணைம் அறிவிப்பு...!

Wed Jul 20 , 2022
குரூப் 1 தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த தேர்வர்கள் வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் […]

You May Like