fbpx

தினமும் 2GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள்.. 425 நாட்கள் வேலிடிட்டி.. அதுவும் கம்மி விலையில்..!! – BSNL-ன் அசத்தல் திட்டம்

நீண்ட காலம் செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்பு திட்டங்களில் அதிகமான பயனர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படிப்பட்டவர்களை மனதில் வைத்து பிஎஸ்என்எல் பல சுவாரஸ்யமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான BSNL 2025ல் கொண்டு வந்த சில சிறந்த திட்டங்களின் விவரங்கள் உங்களுக்காக. 

இந்த ஆண்டு பிஎஸ்என்எல் கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று ரூ.1198 ரீஜார்ச் பிளான். இதன் வேலிடிட்டி 365 நாட்கள். மேலும், வாடிக்கையாளர்கள் 300 நிமிட குரல் அழைப்புகளையும் 3 ஜிபி டேட்டாவையும் பெறலாம். மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் 30 SMSகளை இலவசமாகப் பெறுவீர்கள். இரண்டு சிம் பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

BSNL ரூ.2099 திட்டம் : இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 10 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் : பிஎஸ்என்எல் ரூ.2399 திட்டம் 425 நாட்கள் சேவை செல்லுபடியாகும். அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

BSNL ரூ.2999 திட்டம் : BSNL இல் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி இணைய டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறலாம். இது 365 நாட்களுக்கு சேவை செல்லுபடியாகும். இதற்கிடையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வேகமாக விரிவுபடுத்த தயாராகி வருவது தெரிந்ததே. 

Read more ; பல்வலி கூட புற்றுநோயின் அறிகுறி தான்.. அலட்சியம் வேண்டாம்..!! – நிபுணர்கள் எச்சரிக்கை

English Summary

2GB data per day, unlimited calls.. 425 days validity. What is the price..

Next Post

கருணை அடிப்படையில் வேலை கேட்டு வந்தவரை கருணையே இல்லாமல் டார்ச்சர் செய்த அரசு அதிகாரி..!! தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Mon Jan 13 , 2025
A government official who sexually harassed a young woman who had requested a job on compassionate grounds after her father died has been arrested and imprisoned.

You May Like