Death sentence: மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஃப்ராக்காவ் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 9 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபனந்து ஹல்தர், சுபோஜித் ஹல்தர் ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் தீபனந்து சம்பவ நாளில் அந்த சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சுபோஜித் என்பவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இந்த வழக்கு நேற்று முர்ஷிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி தீபனந்துவுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. முன்னதாக ஆயுத பூஜை அன்று சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து கற்பழித்துள்ளார். அந்த சிறுமி இறந்த பின்னரும் சடலத்துடன் அவர் உடலுறவு வைத்துள்ள சம்பவம் நடுங்க வைக்கிறது. கடந்த 6-ஆம் தேதி, பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், 9 வயது சிறுமி வழக்கில் 8 நாட்களுக்குள் மீண்டும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
Readmore: BREAKING| விடிய விடிய சிறை!. விடுதலை ஆனார் நடிகர் அல்லு அர்ஜுன்!