நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்து எழும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் நடிகை மீனா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார்.
அவ்வை ஷண்முகி, அன்புள்ள ரஜினிகாந்த், ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, என் ராசாவின் மனசிலே, எஜமான், ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, கூலி, சிட்டிசன், தாய்மாமன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார். நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனிடையே கொரோனா காலகட்டத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார். அதன் பிறகு மீனாவின் மறுமண செய்திகள் தொடர்ந்து, வெளியான வண்ணம் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே பதிலளித்துள்ளார்.
அதில், மறுமண செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் உண்மையை மட்டும் சொல்லுங்கள். அது நல்லது. நாட்டில் என்னை போல் தனிமையில் வாழும் பெண்கள் பல பேர் இருக்கிறார்கள்.
அந்த பெண்களின் பெற்றோர், குழந்தைகள் பற்றியும் தயவுசெய்து கொஞ்சமாவது யோசிங்கள் என்றும், இப்போது என்னுடைய இரண்டாம் திருமணம் பற்றி எந்த சிந்தனையும் எனக்கு இல்லவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.