fbpx

இன்ஸ்டா காதலனுடன் 2-வது திருமணம்..!! தடையாக இருந்த 5 வயது குழந்தை..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!

தனது இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்த 5 வயது மகளை, அவரது தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம் அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த இளம்பெண், திடீரென தனது மகளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது, குழந்தையின் கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, உடனே மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணையை நடத்தினர். அப்போது, குழந்தையை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டார். விசாரணையில், பெண்ணின் கணவர் அவரையும், குழந்தையையும் விட்டுவிட்டு தனியாக சென்ற நிலையில், இளம்பெண்ணுக்கு ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ராகுலை திருமணம் செய்து அந்தப் பெண் முடிவு எடுத்துள்ளார். ஆனால், அதற்கு தன்னுடைய 5 வயது குழந்தை தடையாக இருந்ததாக எண்ணியுள்ளார். மேலும், குழந்தையை ராகுலின் குடும்பத்தில் ஏற்க மறுத்துள்ளார். இதனால், செய்வதறியாது இருந்த அப்பெண், தன்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை..!! டிகிரி முடிந்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

The shocking incident of a mother killing her 5-year-old daughter for interfering with her second marriage has left her shocked.

Chella

Next Post

Uttar Pradesh : மசூதி ஆய்வுக்கு எதிரான வன்முறையில் 3 பேர் பலி..!! - நீடிக்கும் பதற்றம்!

Mon Nov 25 , 2024
The incident of death of 3 people who protested against the inspection of Jama Masjid in Uttar Pradesh has created a sensation.

You May Like