fbpx

2-வது டெஸ்ட் கிரிக்கெட்..!! ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து..!!

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்தது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. இதனால், 226 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது நாளான ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, நேற்றைய ஆட்ட முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 258 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன்கள் வித்தியாசத்திக் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

Chella

Next Post

விவசாயிகளே..!! 13-வது தவணைப் பணம் இன்னும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவில்லையா..? உடனே இதை செய்யுங்க..!!

Tue Feb 28 , 2023
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் […]

You May Like