fbpx

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில், ஆண்டுதோறும் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை முன்னிலையில் குருபூஜைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க அக்.28 முதல் 30ஆம் தேதி வரை போதிய எண்ணிக்கையுடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசுப் பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்திலும் ஒரு காவலரை நியமனம் செய்ய வேண்டும். தனி நபர்கள் அமைக்கும் அன்னதான பந்தலின் உறுதித்தன்மையை சரி பார்க்க வேண்டும். நினைவிட மேற்கு புறம், முக்கிய பிரமுகர்கள் வருகிற வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். அக்.29, 30ஆம் தேதிகளில் முறையே 200 மற்றும் 250 பேருந்துகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்கப்பட வேண்டும். மின் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி பழுதுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட முக்கியமான உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

இதன் தொடர்ச்சியாக தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 3 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படுவதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ஆம் ஆண்டு குருபூஜை விழா வரும் அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி அரசு விழாவாக நிறைவு பெறுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் 28, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். அரசு உத்தரவை மீறி இந்த நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chella

Next Post

ஆன்லைன் பேமெண்ட்..!! முன்பதிவுகளை ரத்து செய்யும் கேப் ஓட்டுநர்கள்..!! தமிழக அரசு அதிரடி

Thu Oct 27 , 2022
தமிழகத்தில் செயலி மூலம் செய்யப்படும் இருசக்கர, ஆட்டோ, கேப் முன்பதிவுகளை ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் டாக்சி, ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாகவும், நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சவாரி செய்வதை ரத்து செய்வதாகவும் பல புகார்கள் எழுந்தது. இந்நிலையில், […]
’

You May Like