சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் மர்ம இருப்பதாக பலர் கூறி வந்தனர்.
இதனிடையே சுவாதி இறந்ததற்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் . இதனால் நாங்கள் எங்கள் மகளை இழந்து விட்டோம். இதனால் ரயில்வே நிர்வாகம் ரூ.3 கோடி இழப்பீடு தர வேண்டும் என ஸ்வாதியின் பெற்றோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணையின் போது பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை ரயில்வே அளித்து வருகின்றது. இது திட்டமிட்ட கொலை எனவே இதில் நிர்வாகத்தின் தவறு எதுவும் இல்லை என பதில் கூறியிருந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார்.