fbpx

நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!! உற்சாகத்துடன் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் தீபாவளி விடுமுறை தொடங்குகிறது. நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் நவ.13ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறையுடன் மக்கள் தீபாவளியை கொண்டாட உள்ள நிலையில், இன்று அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Chella

Next Post

ஆட்டோ டெலிட் அம்சம் இல்லையா?… தேவையற்ற இமெயில்களை நீக்க ஈஸியான வழி!

Sat Nov 11 , 2023
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான செயலி அல்லது சேவைகளை கணினி அல்லது ஸ்மார்ட்போன் வாயிலாக பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே உள்நுழைய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவையற்ற இ – மெயில்களால், கூகுள் இலவசமாக தரும் 15 ஜி.பி., ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பி விடுகிறது. மேலும் இதுகுறித்து அறியாத சிலர், தங்களது போட்டோக்கள், தொடர்பு […]

You May Like