fbpx

குஜராத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து..!! – 3 பேர் பலி 

குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில், கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின்படி, இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை ஏஎல்எச் துருவ் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது, ​​விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

https://twitter.com/ANI/status/1875815889083494705

Read more ; OYO Hotel | இனி திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது.. செக்-இன் விதிகளின் மாற்றம் கொண்டு வந்த OYO..!!

English Summary

3 Dead As Coast Guard Helicopter Crashes At Gujarat’s Porbandar Airport

Next Post

UPI பயனர்களைக் குறிவைக்கும் புதிய ‘ஜம்ப்ட் டெபாசிட் மோசடி’: உங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது..?

Sun Jan 5 , 2025
Banks and police continue to warn the public about the increasing number of online scams.

You May Like