fbpx

இந்த ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு சொன்ன நற்செய்தி..

மின்வாரிய ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதமாக உயர்ந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது..

ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என்றும், செப்டம்பர் 2022 மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,100 – 12,500 பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது..

Maha

Next Post

ஈரானில் நெட்வொர்க் செயல்பாடு துண்டிப்பு… மக்களுக்கு உதவி தேவை என்ற வாசகம் வைரல்…

Sat Sep 24 , 2022
ஈரானில் பெண்கள் தற்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு வருவதால் ’ஹெல்ப் டு ஈரான்’ என்ற வாசகம் வைரலாகி வருகின்றது ஈரானில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி 22 வயதான மாஜா அமினி என்ற பெண் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெண்கள் வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தங்கள் முடியை வெட்டிக் கொண்டும் […]

You May Like