நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி; டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்று அதிகாலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. அதிகாலை 1.58 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்டில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.
டில்லி, நொய்டா, காசியாபாத் மற்றும் இந்தியாவின் தலைநகரின் அருகிலுள்ள நகரங்களில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நேபாளத்தை உலுக்கிய 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி-என்சிஆர் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பல பகுதிகளும் இன்று நிலநடுக்கத்தை உணர்ந்தன.