fbpx

ஓபிஎஸ் அணிக்கு 3 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி..!! பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டி..?

பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேனி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் மகனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்றும் ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டாலும், தனது மகன் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதி என்றும் ஓபிஎஸ் தனது தரப்பிடம் கூறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதாகவும் எப்படியாவது அந்த சின்னத்தை பெற்று விட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Chella

Next Post

கண் முன்னே நேர்ந்த கொடூரம்.! மரத்தில் கட்டி வைக்கப்பட்ட ஆண் நண்பர்.! தரதரவென காட்டுக்குள் இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட இளம் பெண்.!

Tue Feb 6 , 2024
மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் 23 வயது சுற்றுலா கற்பழிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் ஆண் நண்பர் குற்றவாளிகளால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இளம்பெண்ணை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் […]

You May Like