கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புறநகர் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 31ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள், சிறுமிக்கு கேக் கொடுத்துள்ளனர்.
பின்னர், சிறிது நேரம் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சிறுமியை தூக்கிச் சென்று பள்ளி வளாகத்திலேயே ஒரு மறைவான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த சிறுமியிடம் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டியதால், வீட்டிற்கு சென்ற சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை.
மறுநாள் காலையில் சிறுமிக்கு அதிகளவில் வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி, இதுகுறித்து விசாரிக்கையில், நடந்த விவரங்களை கூறி சிறுமி அழுதுள்ளார். பின்னர், இதுதொடர்பாக சிறுமியின் சித்தி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.