fbpx

சிறுமியின் சடலத்துடன் உடலுறவு!!! நெஞ்சை பதைபதைக்கும் கொடூர சம்பவம்..

சமீப காலமாக பெண்கள் மட்டுமின்றி சிறுமிகள் பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் வெளியே சென்ற தங்களின் பிள்ளைகள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளனர். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் நடந்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் தனியே இருந்த சிறுமி சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னர், அவரின் சடலத்தை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், சிறுமியை கொலை செய்ததாக பிப்லாப் பால், ஸுப்ரா மலகர், ராகுல் தாஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மூவரும், சிறுமியின் வீட்டை நோட்ட மிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மூவரும், சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.

ஆனால் சிறுமி மறுப்பு தெரிவித்தால், துப்பட்டாவால் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, சிறுமியின் சடலத்தை பலாத்தாரம் செய்துள்ளனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான ராகுல் தாஸ், மத்திய இரயில்வே துறையில் நான்காம் நிலை ஊழியர். கடந்த ஒரு மாதமாக, சிறுமியுடன் செல்போனில் நல்லவன் போல பேசி தொடர்பில் இருந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும், காவல் துறையினர் கைது செய்தனர்.

Maha

Next Post

“சார், கெமிஸ்ட்ரி டீச்சர் என்னோட கைய கடிச்சுட்டா” அழுது புலம்பிய H.M..

Fri Sep 29 , 2023
முன்பெல்லாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் முன்மாதிரியாக இருந்தனர். ஆசிரியர்களை பார்த்து நான் இவரை போன்று முன்னேற வேண்டும் என்ற ஆசையில் வாழ்கையில் முன்னுக்கு வந்தவர்கள் அநேகர். ஒரு பக்கம் மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்வது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதே சமயம், ஆசிரியர்கள் குழந்தைகள் போல் ஒருவரை ஒருவர் தாக்கி தங்களின் மரியாதையை கெடுத்து விடுகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் […]

You May Like