fbpx

திருமணத்திற்கு முன் 3 மாதம் லிவிங் ரிலேஷன்ஷிப்..!! ஜெயில்ல இருக்கும்போது கல்யாண ஆசை வந்துருச்சு..!!

திருமணம் செய்வதற்கு முன் மணவாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும் என TTF வாசன் தெரிவித்துள்ளார்.

40 நாட்களாக சிறைவாசம் வாழ்ந்த TTF வாசனுக்கு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீன் வழங்கியது. பல நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் எட்டி பார்த்த வாசன், சர்ச்சையான விஷயம் ஒன்றை கூற அது தற்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நெடு நாள் கழித்து நேரலை வந்த வாசனிடம் பலரும் கேட்ட கேள்விக்கு தனக்கு 40 நாட்கள் சிறை வாசம் பல அனுபவத்தை தந்ததுதான்.

ஆனால், சிறை வாழ்க்கையில் தனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. கனவு கார் வாங்கிட்டு. வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆகிட்டு அப்புறம் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். ஆனால் தனக்குள் பல கனவுகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி கல்யாண ஆசை வந்துவிட்டது. இப்பொது கல்யாணம் செய்யலாம் என்று இருக்கிறேன். அதும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கிறேன். 3 மாதம் லிவிங் டு கெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும். ஏனென்றால், லைஃப்பில் நிறைய பார்த்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வாசனின் சேட்டைகளுக்கு கடும் கோபத்தை காட்டிய நீதிமன்றம், அவரின் வாகனத்தை எரிக்க வேண்டும் எனவும் அவரின் யூடியூப் தளத்தை முடக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. ஜாமீனில் வெளியில் வந்து இருக்கும் இவர் காட்டும் அலப்பறைகள் காவல் துறையினரை முகம் சுளிக்க வைக்கிறது. தற்போது அவர் பேசிய லிவிங் டுகெதர் விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Chella

Next Post

ஏன் இந்த அவசரம்..? ஒன்னுமே பண்ண முடியல..!! ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி..!!

Wed Nov 15 , 2023
அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அவசரம் காட்டுவது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் […]

You May Like