ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் போவ்ரா கோலியரி பகுதியில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இன்று காலைஇல் திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியோடு நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அதில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையினர் இறந்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை தெரியவில்லை என கூறியுள்ளனர். அந்த நிலக்கரி சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.