fbpx

”10 நிமிடத்தில் 3 குவாட்டர்”..!! நண்பர்களிடம் பெட் கட்டிய ஆட்டோ ஓட்டுநர்..!! பரிதாபமாக பறிபோன உயிர்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஜெய் சிங் (45) என்ற ஆட்டோ ஓட்டுனர், மதுவுக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. இவர் சக நண்பர்களான போலா, கேசவ் ஆகியோருடன் இணைந்து மது அருந்த சென்றுள்ளார். ஆனால், அன்று இரவு ஜெய் சிங் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, ஜெய்சிங்கின் மகன் அவரை தேடியுள்ளார். சாலையில் விழுந்து கிடந்த ஜெய் சிங்கை கண்டுபிடித்த மகன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே, ஆட்டோவுக்கு தவணைத் தொகை செலுத்த ஜெய் சிங் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் பணத்தையும் காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஜெய்சிங்கின் சகோதரர் சுக்பீர் சிங், காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜெய் சிங்குடன் மது அருந்திய போலா, கேசவ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அன்றைய தினம் ஜெய் சிங் நண்பர்களிடம் பந்தயம் கட்டி மது அருந்தியுள்ளார். 10 நிமிடத்தில் 3 குவாட்டர் பாட்டில் மது குடித்து காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். வெற்றி பெற்றால் மதுவுக்கான பணத்தை நீங்கள் கட்ட வேண்டும் என்று அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார். குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஜெய் சிங் சுய நினைவை இழந்தார். அவர் மயங்கியதும் அவரது நண்பர்கள் இருவரும் ரூ.60,000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலா, கேசவ் ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

'என்னையே அடிக்கிறீங்களா...'?ஹைதராபாத் அருகே பேருந்துகளுக்கு தீ வைத்த டிரைவர்!

Thu Feb 16 , 2023
ஹைதராபாத் நகரின் குக்கட் பள்ளி என்ற இடத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்த வழக்கில் அந்த ட்ராவல்ஸில் பணிபுரிந்த டிரைவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள குக்கட் பள்ளி என்ற இடத்தில் பாரதி டிராவல்ஸ் இன்றைய நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குக்கட் பள்ளி உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இந்த […]

You May Like