fbpx

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள்!. நொய்டாவில் பயங்கரம்!

Building Collapse: நொய்டாவில் நிலம் தோண்டும் பணியின்போது, 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் பஹ்லோல்பூர் கிராமத்தில் நேற்று, நிலம் தோண்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, அருகில் இருந்த 3 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 பேரை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என போலீசார் அஞ்சுகின்றனர்.

மேலும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும், நிலம் தோண்டியதால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Readmore: நடுக்கடலில் சேசிங்!. பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் மீட்பு!. இந்திய கடலோர காவல்படை அதிரடி!

English Summary

Portion of 3-storey building collapses in Noida, some feared trapped

Kokila

Next Post

மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புக்கு டிசம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Tue Nov 19 , 2024
You can apply for the Integrated Pharmacy and Nursing Therapy Diploma course.
செவிலியர்களே தயாரா..? கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

You May Like