தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது என்றும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளம்பரப் பலகைகள், பேனர்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டாலோ, காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அத்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், போர்கள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டட உரிமையாளருமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் மீது உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.