fbpx

தியேட்டரில் திரைப்பட திருட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை!… கடுமையான விதிகள்!… மசோதா நிறைவேற்றம்!

திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனை தடுக்க கடுமையான விதிகளுடன் திருத்தம் செய்யப்பட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். திரைப்படத் திருட்டு புற்றுநோய் போன்றது என்றும் இதனை வேரோடு அழிக்க இந்த மசோதா வழி செய்யும் என்றும் கூறியுள்ளார்.

தியேட்டரில் வெளியான படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் படத்தின் தயாரிப்புக்கு ஆன செலவில் 5 சதவீதத்தை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கும் போது அதை வயது வாரியாக யுஏ 7 பிளஸ், யு ஏ 13 பிளஸ் மற்றும் யுஏ 6 பிளஸ் என மூன்று பிரிவுகளாக வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

தூள்...! திருமண உதவித்தொகை உள்ளிட்ட 5 திட்டம்...! இ-சேவை மூலமே விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம்

Sat Jul 29 , 2023
தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை மூலம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு இ-சேவை தளம்‌ வழியாக மாற்றுத்திறனாளிகள்‌ விண்ணப்பிப்பதற்கு இணையதளம்‌. ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம்‌ வாயிலாக தற்போது 5 திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌, உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்கான விண்ணப்பம்‌, வங்கி கடன்‌ மானிய விண்ணப்பம்‌, திருமண உதவித்தொகை விண்ணப்பம்‌, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம்‌ போன்ற விண்ணப்பங்கள்‌ உள்ளன. மாற்றுத்திறனாளிகளின்‌ சிரமத்தினைபோக்கவும்‌, விண்ணப்பித்த விண்ணப்பத்தின்‌ தற்போதைய […]

You May Like