fbpx

30 லட்ச ரூபாய் சாலை…! ஒரே நாளில் உதிரி உதிரியாக வரும் ஜல்லிக் கலவை..! பொதுமக்கள் அதிருப்தி…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

குன்னூரில் லேம்ப்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சாலைகளை புனரமைக்க ரூ.30லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலைகளை சீரமைக்கு பணி தொடங்கியது. ஆனால் தார் கலந்த ஜல்லிக் கலவை தரமின்றி உள்ளதாக உள்ளூர் மாக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை சீரமைக்கப்பட்டு ஒரு நாளைக்குள் ஜல்லிக் கலவை உதிர்ந்து சாலை மேடும் பள்ளமுமாக ஆனதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் மீது புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான சாலையை அமைத்து தர வேண்டுமென்று மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர். தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகார் வந்ததை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிந்ததால் சாலைப் பணியை உடனடியாக நிறுத்தவும், ஏற்கெனவே போட்ட சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய தார் சாலையை தரத்துடன் அமைத்துக் கொடுக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குன்னூர் நகர மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

என்னதான் அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கினாலும், இடையில் இருக்கும் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் இப்படி மனிதாபமின்றி நடந்துக் கொள்வது புதிதல்ல என்பதே நிதர்சனம்.

Kathir

Next Post

பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி..!! இதுதான் கரெக்ட் டைம்..!! ரூ.15 ஆயிரமா..? உடனே முந்துங்கள்..!!

Mon Aug 28 , 2023
இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் ஒரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அது பஜாஜ் சேடக் தான். இதற்கு போட்டியாக டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் 450X, மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் உள்ளன. இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, பஜாஜ் நிறுவனம் தனது சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை எப்போது தொடங்கப்படும் என்பது பற்றி சரியான தேதியை […]

You May Like