fbpx

இந்தியாவில் 30% இளைஞர்கள் கல்வி, வேலையில்லாமல் உள்ளனர்!… கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி!

இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய 30% இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தியாவில் கல்வி வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கருத்துக்கணிப்பின் முடிவில், இந்தியாவில் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 29.3% பேர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களுக்கு முன் 15 முதல் 29 வயது உடைய இளைஞர்கள் 34.9% பேர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று இருந்தனர் என்றும் அந்த ஆய்வு முடிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 9.9% குடும்பங்கள் புதிய வீடு மற்றும் பிளாட் வாங்கியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 50% குடும்பங்கள் முதல் முறையாக புதிய வீடு வாங்கியுள்ளனர் என்றும் ஆய்வு முடிவில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சமையலுக்கு எரிசக்தியை ஆதாரமாக பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 63.1% என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நகரப்புறங்களில் சுத்தமான எரிபொருளை பயன்படுத்துவதில் கணிசமான வித்தியாசம் இருந்ததாகவும் கிராமப்புறங்களில் 49.8% குடும்பங்களும் நகர்ப்புறங்களில் 92 சதவீதம் குடும்பத்தினரும் எரிசக்தி ஆதாரத்தை சமையலுக்கு பயன்படுத்துவதாக இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் ஆதாரங்களை பொறுத்தவரை 95 சதவீதம் பேர் பாட்டில் குடிநீர் மற்றும் குடியிருப்பு குழாய் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் மீதம் 5% பேர் மட்டுமே கிணறு மற்றும் பொது டேங்கர்கள், மழை நீர் சேகரிப்பு ஆகியற்றில் இருந்து கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 98 சதவீதம் பேர் மேம்படுத்தப்பட்ட கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் இரண்டு சதவீதம் மட்டுமே திறந்தவெளி கழிவறைகளை பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

577 காலி இடங்கள்.. மத்திய அரசில் வேலை.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Thu Mar 9 , 2023
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC, இபிஎஃப்ஓ அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரிகள் மற்றும் உதவி நிதி ஆணையர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் UPSC-upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 17, 2023 ஆகும். இதன் மூலம் 577 காலி பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம்: மொத்தம் 577 காலியிடங்கள் (418 அமலாக்க அதிகாரி […]

You May Like