ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இந்நிலையில் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. பிரபல திரைப்பட வரத்தக கண்காணிப்பாளர் ரமேஷ் பாலா, பதான் படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி மொத்த வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.. வார இறுதியில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.. அதன்படி, வார இறுதியில் முடிவில் படம் 400 கோடி வசூலைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது..
ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வந்த இப்படம், வெளியான மூன்றே நாட்களில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடித்துள்ளது என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் மொத்தமாக சுமார் ரூ.160 கோடி வசூல் செய்து, பாகுபலி 2 (ரூ. 127 கோடி ) மற்றும் கேஜிஎஃப் 2 (ரூ. 140 கோடி ) ஆகியவற்றின் முதல் வார சாதனைகளை பதான் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பதான் படத்தில் இடம்பெற்ற பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்திருந்ததால் வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..