fbpx

3,000 காலிப்பணியிடங்கள்..!! ரூ.47,000 வரை சம்பளம்..!! கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் வரும் 1ஆம் தேதியுடன் முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.11,000 – ரூ.45,100, இளநிலை உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.10,000 – ரூ.42,500, செயலாளர் பதவிக்கு ரூ.15,000 – 47,600 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 01.12.2023 ஆகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு 24.12.2023 அன்று நடைபெறவுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf இங்கே கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.drbchn.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Chella

Next Post

’திருமணத்திற்கு பின் மகன் இறந்துவிட்டால் தாய்க்கு சொத்தில் பங்கு கிடையாது’..!! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு..!!

Sat Nov 18 , 2023
இந்திய வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாகையை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆண்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயதான தாய் உள்ளார். இவரது பெயர் பவுலின் இருதய மேரி. இந்நிலையில், மகனின் சொத்தில் பங்கு கேட்டு தாய் பவுலின் இருதய மேரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த […]

You May Like