fbpx

வங்கிகளில் 3,049 காலிப்பணியிடங்கள்!… டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!… உடனே அப்ளை பண்ணுங்க!

IBPS மூலம் பொதுத்துறை வங்கிகளில் 3049 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் பொதுத்துறை வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 3,049 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsonline.ibps.in/crppo13jun23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023 ஆகும்.

Kokila

Next Post

முதன்முறையாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் சேவை!… வெளியானது அறிவிப்பு!

Wed Aug 2 , 2023
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பெங்களூரு இடையே தினமும் லட்சக்கணக்கான மக்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இதனால், ஓசூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் சாலையில் வாகனங்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு – ஓசூர் இடையே […]

You May Like