fbpx

ஆஹா…! 6 மாததிற்கு மேல் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் கட்டாயம்…! மத்திய அரசு அதிரடி

6 மாததிற்கும் மேல் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும், குறைந்தப்பட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.

கிராமப்புற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தீனதயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யப்பட்ட 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம், 31,067 கிராமப்புற ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரடியாக இணைக்கவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், திறமைக்கேற்ற பணியை தேர்வு செய்து வழங்கவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுக்கான உத்தரவாதத்திலிருந்து விலக்கு, வங்கிக்கடன் தள்ளுபடி நடைமுறைக்கான கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

மத்திய கிராமப்புற அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் திறன்படைத்த இளைஞர்களை உருவாக்கி அவர்களை வேலைக்கு அமர்த்தும் இலக்கு அந்த நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு செலவில் பயிற்சி பெறும் வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்கிறது. கட்டாயம். அவ்வாறு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு ரூ. 10ஆயிரம் வீதமும், 6 மாததிற்கும் மேல் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும், குறைந்தப்பட்ச ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என இந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடடே இது நல்லாயிருக்கே!... நூடுல்ஸ் மூலம் சாலையில் உள்ள குழிகளை மூடும் நபர்!... அரசின் கவனத்தை ஈர்க்க புதிய முயற்சி!

Sat Apr 1 , 2023
இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நூடுல்ஸ் மூலம் சாலைகளில் உள்ள குழிகளை மூடிவரும் நபரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி மார்க் மோரல். இவர் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல நல்ல பதிவுகளை தனது சமூகவலைத்தளபக்கங்களில் வெளியிட்டு பலரதுகவனத்தையும் பெற்றவர். அந்த வகையில், அவரது நகரத்தின் தெருக்கள் குழிகள் நிறைந்த சாலைகளாக இருப்பதை பார்த்த அவர், இந்த […]

You May Like