fbpx

ஒரே நாளில் 32 கோடி தங்கம் பறிமுதல்… நிர்மலா சீதாராமன் பாராட்டு…

மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் 32 கோடி மதிப்பில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ஷாருக்கான் எடுத்துச் சென்ற விலை உயர்ந்த வாட்சுக்கு அபராதம் விதித்தனர். அதே போல 61 கிலோ எடையுள்ள 32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை 7 பயணிகளிடம் பரிமுதல் செய்தனர். சோதனையில் தங்கக்கட்டிங்கள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரே நாளில் ரூ.32 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ’’ சுங்கத்துறை அதிகாரிகள் எப்போதும் எச்சரிக்கையாக செயல்படுகின்றார்கள். சரியான நேரத்தில் செயல்படுகின்றனர். இதனால் முடிவு பிரம்மிக்க வைக்கின்றது. என்று நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில் மும்பை விமான நிலையத்தில் 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 32 கோடி மதிப்பு தங்கத்தை 7 பயணிகள் 2 வெவ்வேறு பெட்டிகளில் கொண்டு வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆண்கள், 2 பெண்கள் என 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். மும்பை சுங்கத்துறை வரலாற்றில் ஒரே நாளில்மிகப்பெரிய அளவிலான தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என குறிப்பிட்டுள்ளார்.

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கடத்தல் தங்கத்தை ஒரு பெட்டியில் வைத்து நான்கு பேர் கடத்தியுள்ளனர். நான்கு பேரும் பெல்ட்டில் வைத்தும் தங்கத்தை கடத்தி உள்ளனர். துபாய் டிசைனில் பார்களாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல மற்றும் 2 பேரிடம் இருந்தும் தங்கம் பார்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Post

வீதிவரை வந்த தகராறு… வியாபாரி மீது தீவைக்க முயன்று அதே தீயில் எரிந்தவரால் பரபரப்பு...

Sun Nov 13 , 2022
திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது. திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார். ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் அந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த கடையை […]

You May Like