fbpx

320 ஆண்டுகள் பழைமையான செய்தித்தாள் நிறுத்தம்..!

ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது.

வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. 1703ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் செய்தித்தாள், நேர்மறையான செய்திகளைப் பிரசுரித்து வந்தது. ஆரம்பத்தில் “Wiennerisches Diarium” என்று அழைக்கப்பட்ட இந்த செய்தித்தாள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகள், பண்பாடு மற்றும் வணிகச் செய்திகளில் விரிவான கட்டுரைகளை வெளியிடுவதில் பெயர்பெற்று விளங்கியது.

தொடர்ந்து பத்திரிகை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய ’வீனர் ஜெய்டுங்’ சமீபத்தில் நிகழும் தொழில் நுட்ப மாற்றங்களால் சிக்கல்களை எதிர்கொண்டது. டிஜிட்டல் வருகையினால் இதன் அச்சுப் பதிப்பு நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்த நிதிச் சிக்கலால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த 63 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்படி, அந்த நிறுவனம் நேற்று (ஜூன் 30) தன்னுடைய இறுதிப் பதிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று வெளியிட்ட அந்தப் பதிப்பின் முதல் பக்கத்தில், வாசகர்களுக்கும் விளம்பர ஏஜென்சி நிறுவனங்களுக்கும் நன்றி செலுத்தியது. மேலும், அதில் ’1,16,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 ஜனாதிபதிகள், 10 கைசர்கள், 2 குடியரசுகள், 1 செய்தித்தாள்’ எனப் புகழுரை வழங்கியுள்ளது.

Maha

Next Post

பீட்சா ஆர்டர் செய்த பெண்ணிடம் ப்ரபோஸ் செய்த சம்பவம்..! 

Sun Jul 2 , 2023
கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் […]
பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம்..! ஆபாசமாக திட்டிய தொழிலதிபர்..! சொகுசு காரின் கண்ணாடியை உடைத்த டெலிவரி பாய்..!

You May Like