fbpx

பாதுகாத்து வைக்கப்படும் 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற்பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும்.

இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் சேகரிக்கப்படும் முட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு 45-50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.

இந்த ஆண்டு தற்போது வரை 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக்குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக சீர்காழி வனச்சரகர் டேனியல் தெரிவித்துள்ளார்.

Kathir

Next Post

வசூலை குவித்த பழனி முருகன் கோவில்... 20 நாளில் இத்தனை கோடியா?

Sat Jan 7 , 2023
திண்டுக்கல் மாவட்டம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வந்திருந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 20 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்பட்டு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. எண்ணிக்கையின் மொத்த தொகையாக ரொக்கம் மூன்று கோடியே 80 இலட்சத்து 45 ஆயிரத்து 807 ரூபாய் காணிக்கையாக இருந்தது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, […]

You May Like