fbpx

#BREAKING: மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்…

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு விளக்கு மசோதா பல வருடங்களாக நிலுவையில் இருந்தது, நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதலையும் பெற்றது, அதன்பிறகு பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்தது. மகளிருக்கு இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்று வரும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாளை புதிய நாடளுமன்றத்திற்கு இடம் மாற இருக்கிறது. புதிய வளாக கட்டடத்துக்கு இடம்மாறிய பிறகு இந்த மசோதாவை தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெறுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது. ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மசோதா என்பதால் இதை மீண்டும் மக்களைவையில் கொண்டுவந்து ஒப்புதல் பெறவேண்டும், மக்களவையில் என்ன மாற்றங்களுக்கு இந்த மசோதா ஒப்புதல் பெறுகிறது அதற்கு மீண்டும் மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு மகளிருக்கு கிடைக்கும்.

இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கையில் எடுக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்டுகிறது. இந்த வருடம் இறுதியில் வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்தவருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது பாஜகவிற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kathir

Next Post

மத்திய அமைச்சரவை ஒப்புதல்!… "மகளிர் இடஒதுக்கீடு மசோதா" தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன..!

Tue Sep 19 , 2023
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?, இதுகுறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷியங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த காலத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதாவை மார்ச் 9, 2010 அன்று நிறைவேற்றியது. இருப்பினும், மக்களவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு முறை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும் நிலுவையிலேயே இருந்து காலாவதியானது. இந்த நிலையில், […]

You May Like