fbpx

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்..!! 2 பேர் மட்டுமே எதிர்ப்பு..!!

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கலானது.

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர்.

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்றது. இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து, விவாதம் நடைபெற்று மாநிலங்களவையில் இன்றே இந்த மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”அண்ணி ஒரு டைம் உங்க கூட”..!! உடலுறவுக்கு மறுத்ததால் குழந்தையை கொன்று ஸ்பீக்கர் பெட்டியில் அடைத்த கொடூரன்..!!

Thu Sep 21 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி-ஜெகதீஷ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டரை வயதில் திருமூர்த்தி என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தை கடந்த 17ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, குழந்தை திடீரென காணாமல் போனதால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், திருப்பாலந்தல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை […]

You May Like