fbpx

34 ஆண்டுகால பயணம் முடிவு!… 91 வயதில் ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்!

Manmohan Singh: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின் அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இவர் தான் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமராவார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் 1966 முதல் 1969 ஆம் ஆண்டு வரை ஐநாவில் பணியாற்றினார்.

பொருளாதார துறையில் சிறந்து விளங்கிய மன்மோகன் சிங் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்திருந்தங்களை உண்டாக்கினார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. அதேசமயம் ஒருபோதும் மக்களவை தேர்தலில் போட்டியிடாத மன்மோகன் சிங் 33 ஆண்டுகால அரசியல் பயணத்திலும் மாநிலங்களவை உறுப்பினராகவே இருந்துள்ளார்.

கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் 91 வயதாகும் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் வெற்றிடமாகவுள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி (sonia gandhi) பதவியேற்கிறார்.

அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளனர்.

Readmore: சளி என அலட்சியம் வேண்டாம்!… தொண்டை புற்றுநோயாக இருக்கலாம்!… அறிகுறிகள் இதோ!

Kokila

Next Post

செவ்வாழையை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது…! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!

Wed Apr 3 , 2024
அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. அதிலும் செவ்வாழை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு ஊட்ட சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை […]

You May Like