உலகம் முன்னெப்போதும் இல்லாத அவசரநிலையை எதிர்கொள்வதாக ஐ.நாவின் உலக உணவு திட்ட இயக்குநர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி இதுகுறித்து பேசினார்.. அப்போது “ 82 நாடுகளில் 345 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது, கொரோனாவுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகம்.. 45 நாடுகளில் உள்ள 50 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பசியின் அலை இப்போது பசியின் சுனாமியாக மாறி உள்ளது” என்று கூறினார்,

மேலும் பேசிய அவர் “ அதிகரித்து வரும் மோதல்கள், தொற்றுநோயின் பொருளாதார அலை விளைவுகள், காலநிலை மாற்றம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போர் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்… பிப்ரவரி 24 ரஷ்யா தனது அண்டை நாடு மீது படையெடுத்ததில் இருந்து, உணவு, எரிபொருள் மற்றும் உரச் செலவுகள் உயர்ந்து 70 மில்லியன் மக்களை பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளி உள்ளது..
ரஷ்யாவால் தடுக்கப்பட்ட மூன்று கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்ய ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்த போதிலும், ரஷ்ய உரங்களை மீண்டும் உலக சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்தாலும், இந்த ஆண்டு பல பஞ்சம் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.
ஏமனில் ஆண்டுகள் நடைபெற்ற போருக்கு பிறகு, “சுமார் 19 மில்லியன் மக்கள், 10 பேரில் ஆறு பேர், கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், 160,000 பேர் பேரழிவை எதிர்கொள்கின்றனர், மேலும் 538,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே, அஃபர் மற்றும் அம்ஹாரா பகுதிகளில், 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உயிர் காக்கும் உணவு தேவை.. வடகிழக்கு நைஜீரியாவில், 4.1 மில்லியன் மக்கள் அதிக அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். எனவே மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை அதிகரிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..