பீகாரில், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தின் பக்கரிதயல் துணைப்பிரிவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மதிய உணவை உட்கொண்டதாகக் கூறப்படும் சில மணிநேரங்களுக்குப் பிறகு குறைந்தது 37 மாணவர்களுக்கும் ஒரு சமையல்காரருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவின் தரம் குறித்து ஆசிரியர்களிடம் குழந்தைகள் புகார் கூறியதையடுத்து, ஆசிரியர்கள் பள்ளியை மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.. குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் கிடைத்ததும், குடும்பத்தினர் பள்ளிக்கு வந்து, உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் அனைவரையும் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தை பகரிதயலின் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) குமார் ரவீந்திர உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர் “ சிஷானி கிராமத்தில் உள்ள ராஜ்கியா மத்திய வித்யாலயாவைச் சேர்ந்த 37 குழந்தைகள் வரை கிராமப் பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு வயிற்று வலி ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக மருத்துவமனையில் ற்பாடு செய்தோம்.. கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது..” என்று தெரிவித்தார்..
இதனிடையே மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.. மேலும் குழந்தைகள் 24 மணி நேரமும் தங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இருப்பினும், உணவு மாதிரியை ஆய்வு செய்தால் தான் உண்மையான காரணத்தை நன்கு தீர்மானிக்க முடியும்” என்று தெரிவித்தார்..