fbpx

2025-ல் மூன்றாம் உலகப் போர்..? COVID-19 முதல் டிரம்ப் வெற்றி வரை துல்லியமாக கணித்த நபரின் பகீர் கணிப்புகள்..

கொரோனா பற்றிய துல்லியமான கணிப்புகளை செய்த நிக்கோலஸ் அஜுலா, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மூன்றாவது உலகப்போர் தொடங்கும் எனக் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் மைக்கேல் டி நாஸ்ட்ரேடேம் மற்றும் பாபா வங்கா போன்ற பிரபல தீர்க்கதரிசிகள் 2025ஆம் ஆண்டிற்கான பல கணிப்புகளை தெரிவித்துள்ளனர். இப்போது, ​​2025ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், ஜோதிடர் நிக்கோலஸ் ஆஜூலா திடுக்கிடும் கணிப்புகளை தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றுநோய், டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை இவர் முன்னதாக துல்லியமாக கணித்திருந்தார்.

38 வயதான அஜுலா லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் மற்றும் ஜோதிடர். அவர் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் நிகழ்வுகளை கணித்து வெளியிட்டுள்ளார். அஜுலாவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மனிதகுலம் வன்முறை மற்றும் தீய செயல்களை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கு பூமி பழிவாங்கும். காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மனிதகுலத்திற்கு சவால்களை ஏற்படுத்தும். மேலும் 2025 ஆம் ஆண்டில், அறிவியலில் புரட்சிகர முன்னேற்றம் ஏற்படும், உதாரணமாக மனித உறுப்புகள் விரைவில் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும். 2025 ஆம் ஆண்டில், கேட்டி பெர்ரி திருமண பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும், கேட் பிளான்செட் பல விருதுகளை வென்று வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் அவுஜுலா கணித்துள்ளார்.

Read more ; ”முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்”..!! தமிழ்நாட்டில் HMPV குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி..!!

English Summary

38-year-old Aujula is a London-based hypnotherapist and self-proclaimed astrologer who has made startling predictions for 2025

Next Post

"திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு"..!! ”நாங்க போராட அனுமதியில்லையா”..? பாயிண்டை பிடித்த அண்ணாமலை..!!

Tue Jan 7 , 2025
Under the DMK regime, opposition parties are not allowed to fight democratically, but the DMK's futile struggles are allowed.

You May Like