fbpx

காய்கறி மூட்டைகளுக்கு இடையில் கடத்தப்பட்ட 388 கிலோ கஞ்சா…..! காவல்துறையினரின் அலட்சியத்தால் தப்பிச்சென்ற 2 கடத்தல்காரர்கள்……!

ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஒரு லாரியில் புதுக்கோட்டை மாவட்ட வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீவிர சோதனை ஈடுபடுமாறு நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி கீரனூர் அருகே அம்மா சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஒரு விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில், கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அங்கே இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையிலிருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு விற்பனைக்காக ஒன்று செல்வதாக கூறியிருக்கிறார்கள். அதோடு தொடர் விசாரணைக்காக காலையில் ஆஜராவதாக தெரிவித்துவிட்டு சென்ற இருவரும் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் லாரியில் ஏறி சோதனை நடத்தியதில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே 200 பண்டல்களில் 388 கிலோ கஞ்சா பட்டணங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். ஆகவே லாரியில் வந்த இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர்களுடைய எங்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதோடு அவர்கள் வழங்கிய முகவரிகளும் போலி என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Next Post

ரயில்வே தண்டவாளத்தில் டயர் கிடந்த விவகாரம்….! 10 நாட்களுக்குப் பிறகு 3 பேர் அதிரடி கைது…..!

Thu Jun 15 , 2023
திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்து 2ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் அந்த டயர்கள் மீது மோதலில் ரயில் இன்ஜினில் இருந்த மின் இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து நான்கு பெட்டிகளில் மின்சார தடை ஏற்ப்பட்டுள்ளது.. ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாச்சலம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு […]
திருச்சியில் ரயிலை கவிழ்க்க திட்டம்..!! தண்டவாளத்தில் லாரி டயர்கள்..!! இதுதான் உண்மை..!! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!!

You May Like