fbpx

’4 – 14 வயதிலான குழந்தைகள் லியோ படத்தை பார்க்க வேண்டாம்’..!! அதிகளவில் வன்முறை..!! மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!!

’லியோ’ படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக விநியோக நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அளவுக்கதிகமான வன்முறை இருப்பதாக இந்தப் படத்தை லண்டனில் விநியோகம் செய்யும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், ‘’லியோ படத்தில், அதிக அளவிலான வன்முறையும் கொடூரமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

நாங்கள் எதிர்பார்த்ததை விட, படத்தில் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் காட்சிகளும் இருக்கிறது. இலகிய மனம் படைத்தவர்கள் இதைப் பார்ப்பது கடினம்தான். துரதிர்ஷ்டவசமாக 15-17 வயதுக்குட்பட்ட இளம் ரசிகர்களால் இப்படத்தை பார்க்க முடியாத நிலை இருந்தது’ எனக் கூறியுள்ளது. மேலும், ‘BBFC உடனான விவாதங்களுக்குப் பிறகு, ‘லியோ’ படத்தை 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் பார்க்க வேண்டும் என முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

சில வன்முறை மற்றும் கொடூரமான பின்விளைவுகளின், அல்ட்ரா குளோஸ்-அப் காட்சிகளை மென்மையாக்குதல் மற்றும் படத்தின் மையக்கரு, ஓட்டம், தனித்துவமான தருணங்கள் மற்றும் விஜய்யின் ஈர்ப்பு ஆகியவற்றில் எந்த விளைவுகளையும் இப்படம் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்தோம். ஆனால், 4 – 14 வயது வரையிலான குழந்தைகள் பலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களால் இப்படத்தை பார்க்க முடியாது.

இந்த படத்திற்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வர எதிர்பார்த்த அனைத்து பெற்றோர்களிடமும், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த ஒன்றாக ’லியோ’ திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக உள்ளது’ எனவும் அஹிம்சா குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

லாட்டரி அதிபர் தொடர்புள்ள இடங்களில், 2வது நாளாக வருமானவரித்துறை அதிரடி சோதனை…..!

Fri Oct 13 , 2023
கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், கடந்த 2019 ஆம் வருடம் கோவையில் இருக்கின்ற அவருடைய வீடு உட்பட அவர் தொடர்பான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று காலை 7 […]

You May Like